எஸ்.டி.ஐ.க்கள் பொதுவான தொற்றுநோய்களாகும், அவை அதிகமாக உடலுறவு கொள்ளும் நபர்களை வாழ்க்கையில் ஒரு முறையாவது பாதிக்கும். சில நேரங்களில் நீங்கள் அல்லது உங்கள் கூட்டாளர்களுக்கு எந்த அறிகுறிகளையும் காட்டாமல் ஒரு எஸ்.டி.ஐ. இருக்கலாம். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதன் மூலம் உங்களுக்கு ஒரு எஸ்.டி.ஐ இருக்கிறதா என்று எப்போதும் சொல்ல முடியாது. இருப்பினும், உங்கள் பிறப்புறுப்புகளில் புண்கள் அல்லது புடைப்புகள், அசாதாரண வெளியேற்றம், அரிப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வலி போன்ற ஏதேனும் எஸ்.டி.ஐ அறிகுறிகளை நீங்கள் கண்டால், நீங்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தொடர்ந்து முறையாக பரிசோதித்துக் கொள்ளுதல் நீங்கள் பால்வினைத் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஒரு பயனுள்ள வழி. மருத்துவ சோதனை பயமுறுத்துவதாக இருக்கலாம். ஒரு எஸ்.டி.ஐ.க்கு சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால் அது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும், உங்கள் கூட்டாளர்களுக்கு உங்களால் நோய்த்தொற்றுகளைப் பரப்பக்கூடும்.
எஸ்.டி.ஐ.க்கள் பொதுவானவை என்றாலும், சில நேரங்களில் ஏதாவது ஒரு பால்வினைத் தொற்று ஏற்பட்டால், அது உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருக்கக்கூடும். பெரும்பாலான எஸ்.டி.ஐ.களை ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.. எச்.ஐ.வி போன்ற மற்றவைகளுக்கு, கண்டறியவியலா நிலையில் இருக்கவும், அவற்றை உங்கள் கூட்டாளர்களுக்கு அனுப்புவதைத் தடுக்கவும் நீண்டகால சிகிச்சை தேவைப்படலாம். முழுமையான எஸ்.டி.ஐ பரிசோதனைக்கு உங்கள் மருத்துவ சேவை அளிப்போரிடம் எவ்வாறு கேட்பது என்பதை இங்கே காணவும்.
உங்கள் மருத்துவ பரிசோதனை முடிவுகளைப் பெற்ற பிறகு உங்கள் மருத்துவச் சிகிச்சையைப் பெறுங்கள். இதனைப் பற்றி நீங்கள் பரிசோதனை செய்வதற்கு முன்பு நீங்கள் உடலுறவு கொண்ட அனைத்து பாலியல் கூட்டாளர்களிடமும் சொல்லுங்கள், மேலும் அவர்களுடன் பாதுகாப்பானஉடலுறவைப் பற்றி தொடர்ந்து பேசுங்கள்.
நீங்கள் ஒரு எஸ்.டி.ஐ. பரிசோதனையைப் மேற்கொள்ளும்போது என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றி இங்கே மேலும் அறியவும்.