பாலியல் விளையாட்டுப் பொருட்கள்,மசகுப்பொருட்கள் அல்லது ஆணுறைகள் இவற்றிற்குப் பதிலாக வேறு மாற்றுச் சாதனங்களை நீங்கள் தேட வேண்டியதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தச் சாதனங்களை நீங்கள் எளிதாக பெற முடியாமல் இருக்கலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் வசிக்கும்போதோ அல்லது ஒரு கட்டுப்பாடானப் பகுதியில் வசிக்கும்போதோ சில பாலியல் விளையாட்டுப் பொருட்களை வைத்திருப்பது உங்கள் பாலியல் இரகசியங்களை வெளிப்படுத்தி விடலாம். அல்லது, நீங்கள் ஒரு திருநராக இருந்தால் உங்கள் உடலுக்கு பொருந்தக்கூடியதடுப்பு முறைகளையும், நீங்கள் உடலுறவு கொள்ளும் வகைகளைக்கு ஏற்றவாறு தடுப்புச் சாதனங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
உங்கள் நிலைமை என்னவாக இருந்தாலும், அவற்றின் நோக்கத்திற்காக பொருட்களைப் பயன்படுத்துவது எப்போதுமே சிறந்தது - சிறந்த ஆண்குறி வளையம் என்பது ஆண்குறி வளையமாக பயன்படுத்தப்பட உருவாக்கப்பட்டஆண்குறி வளையம், மேலும் மிகவும் பயனுள்ள தடுப்பு முறைகள் அசலான ஆணுறைகள் மற்றும் பல் அணைகள் ஆகும். இருப்பினும், முறையாக பயன்படுத்தினால் என்றால் பாதுகாப்பான மாற்றுச் சாதனங்கள் உள்ளன.
பாலியல் விளையாட்டு பொருட்களின் மாற்றுச் சாதனங்கள்
வீட்டில் பாலியல் விளையாட்டு பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். நீங்கள் ஒரு செயற்கை ஆண்குறி (டில்டோ), ஒரு ஆண்குறி வளையம் (காக் ரிங்), அல்லது வன்முறை சம்பந்தப்பட்ட பாலியல் விளையாட்டிற்கான வன்பொருட்களைத் (இம்பாக்ட் ப்ளே) தேடுகிறீர்களானாலும், நீங்கள் உத்தேசித்த நோக்கத்திற்குமாறாகப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அதனால் வரும் தீங்கைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பது முக்கியம்.
நீங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை செயற்கை ஆண்குறிகளாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தொற்றுநோயைத் தடுக்க இந்த பொருட்களை ஆணுறை மூலம் போர்த்திப் பயன்படுத்துவதை உறுதிசெய்க. முடி தூரிகை (ஹேர் பிரஷ்) கைப்பிடிகள் மற்றும் காய்கறிகள் மிகவும் பிரபலமானவையும் மற்றும் எளிதில் கிடைக்கும் பொருட்கள் ஆகும். காய்கறிகளில் முற்றிலும் மென்மையான மேற்பரப்புகள்கொண்டிருப்பதில்லை, எனவே அவை ஆணுறையில் சிறிய கீறல்களை ஏற்படுத்தக்கூடும், இது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும். நீங்கள் ஆசன வாயிலினுள் செருகும் எந்த ஒரு செயற்கை ஆண்குறியும் உங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அந்தப் பொருள் அடியில் சற்று படர்ந்து இருக்க வேண்டும்.
மின்சார பல் துலக்குதல் கைப்பிடி அல்லது உங்கள் தொலைபேசி போன்றவற்றை நீங்கள் அதிர்வுப் பொருட்களாக பயன்படுத்தும் போது, அவை நீர்ப்புகாப் பொருட்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த சாதனங்களுடன் எப்போதும் ஆணுறை ஒன்றைப் பயன்படுத்துங்கள், அவற்றை உங்கள் உடலுக்கு வெளியே உள்ள பகுதிகளைத் தூண்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தவும்.
ஆண்குறி வளையங்கள் உங்களுக்கு ஏற்கனவே சொந்தமான பொருட்களிலிருந்தும் வடிவமைக்கப்படலாம். ஆண்குறி வளையங்கள் பயன்படுத்த செருகும் ஆணுறையிலிருந்து நெகிழி (பிளாஸ்டிக்) வளையத்தை மட்டும் வெளியே எடுக்கலாம். ஆண்குறி வளையங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அணியப்பட வேண்டும் மற்றும் உங்கள் ஆண்குறி புடைத்து இருந்தாலும் எளிதாக அகற்றக்கூடிய ஒரு நெகிழ்வான பொருளால் ஆனதாக இருக்க வேண்டும். நீங்கள் சங்கடமாக உணர ஆரம்பித்தால் அல்லது சிராய்ப்புண் ஆவதைக் கண்டால், உடனடியாக வளையத்தைக் கழற்றவும். நீங்கள் அதை அகற்ற முடியாவிட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.
தலையணைகள் மற்றும் காலுறைகள் (சாக்ஸ்) போன்ற பொருட்களை சுய இன்ப மேல் உறைகளாகவும், துணி கிளிப்களை முலைக்காம்பு கவ்விகளாகவும், பெல்ட்கள், ஸ்பேட்டூலாக்கள் அல்லது மர கரண்டிகளை அடிமைத்தனம் மற்றும் தாக்க விளையாட்டிற்காகவும் (பாண்டேஜ் அண்டு இம்பாக்ட் ப்ளே) பயன்படுத்தலாம். அனைத்து பாலியல் விளையாட்டு மாற்றுகளையும் போலவே, இதனால் நேரக்கூடிய அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் மற்றும் அவற்றைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும்.
பாலியல் விளையாட்டு பொருட்களின் மாற்றுகளுக்கான மிகப்பெரிய படிப்பினைகள்: கூர்மையான அல்லது மின்சாரம் சார்ந்த எதையும் உங்களுக்குள் செருக வேண்டாம்; அனைத்து பொருட்களையும் ஆணுறை மூலம் மூடுக; உங்கள் உள்ளே எளிதாக உடையக்கூடியபொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.
மசகு மாற்றுகள்:
மசகு என்பது உடலுறவில் ஒரு முக்கிய பகுதியாகும், இது சவுகரியத்தை அதிகரிக்கிறது மற்றும் பாலியல் தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கிறது. உங்களுக்கு மசகு கிடைக்கவில்லையென்றால், ஏராளமான மாற்று வழிகள் உள்ளன. மசகிற்கு பதிலாக எச்சில் மற்றும் வெவ்வேறு அன்றாட பொருட்களைப் பயன்படுத்தலாம் - Refinery29 இங்கே மாற்றுகளின் நல்ல பட்டியலைக் கொண்டுள்ளது.
பால்வினை நோய் அல்லது கர்ப்பத்தைத் தடுக்க நீங்கள் ஆணுறைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் மசகு மாற்றுப்பொருளில் எந்த எண்ணெயும் இருக்கக்கூடாது. எண்ணெய் ஆணுறைகளை உடைத்து அவற்றை பயனற்றதாக மாற்றும்.
மசகு மற்றும் மசகு மாற்றுகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, மசகு பாலியல் இன்பம் மற்றும் ஆரோக்கியத்திற்கான வழிகாட்டி மையத்தின் தளத்தை இங்கே பாருங்கள்.
தடுப்பு முறை மாற்றுகள்
ஆணுறைகள் அல்லது பல் அணைகள் போன்ற தடுப்பு முறைகளுக்கு மாற்றுகள் கண்டுபிடிப்பது கடினம். உங்களிடம் ஆணுறை அல்லது பல் அணை இல்லாதபோது நீங்களே உருவாக்கக் கூடிய சில தடுப்பு முறைகள் உள்ளன.
எந்தவொரு ஊடுருவலுடன் கூடிய உடலுறவுக்கும் ஆணுறைகளாக நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் மற்றும் நெகிழி உறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கான காரணம் பாலியல் திரவங்களை உள்ளே வைத்திருப்பது தான். இந்த பொருட்களிலிருந்து ரோல்-ஆன் (செயற்கை சுருள்) ஆணுறை உருவாக்க முயற்சிப்பது பாலியல் தொற்று அல்லது கர்ப்பத்தைத் தடுக்க ஒரு சிறந்த வழி அல்ல.
இருப்பினும், வாய்வழிபுணர்ச்சிக்கு ஆசனவாய் அல்லது யோனியை மூடப் பயன்படும் பல் அணையை உருவாக்க நீங்கள் ஒரு ரோல்-ஆன் (சுருள்) ஆணுறை, லேடெக்ஸ் / லேடெக்ஸ் இல்லாக் கையுறைகள் அல்லது நுண்ணலை அடுப்பில் பயன்படுத்த முடியாத நெகிழி உறை ஆகியவற்றை மாற்றியமைக்கலாம். நெகிழி உறை (பிளாஸ்டிக் கவர்) பயன்படுத்துவது மூச்சுத் திணறல் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எல்லா மாற்றுச் சாதனங்கள் போலவே, இந்த பொருட்களும் ஆணுறைகளாகப் பயன்படுத்தப்பட உருவாக்கப்படவில்லை. மேலும் அவைபால்வினை தொற்று அல்லது கர்ப்பம் பரவுவதைத் தடுக்கும் என்று நம்பக்கூடாது.
பாலியல் விளையாட்டுப் பொருட்கள், மசகு, அல்லது தடுப்பு முறைகளின் மாற்றுச் சாதனங்கள் சம்பந்தமாக உங்களுக்கு கேள்விகள் இருந்தால், நீங்கள் இங்கே திட்டமிடப்பட்ட பெற்றோர் நிலை என்ற அமைப்பின் சுகாதார கல்வியாளர்களுடன் இங்கே சேட் (chat) செய்யலாம்