பாலியல் நோய்த்தொற்றுகள், சில நேரங்களில் எஸ்.டி.டி அல்லது எஸ்.டி.ஐ என சுருக்கமாக அழைக்கப்படுகின்றன, இது பாலியல் தொடர்பின் காரணமாக ஏற்படும் நோய்த்தொற்றுகள். நீங்கள் எவ்வாறு உடலுறவு கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் பல வகையான எஸ்.டி.ஐ.-க்களால் பாதிக்கப்படலாம்.
அனைத்து எஸ்.டி.ஐ-களும் ஒரே மாதிரியாக பரவுவதில்லை. கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற சில எஸ்.டி.ஐ.க்கள் விந்து, குத மற்றும் யோனி திரவங்கள் போன்ற உடல் திரவங்களால் பரவுகின்றன. சிபிலிஸ் அல்லது ஹெர்பீஸ் போன்ற பிற எஸ்.டி.ஐ.க்கள் தோல் வழி தொடர்புகளால் பரவுகின்றன
சில நேரங்களில் நீங்கள் அல்லது உங்கள் கூட்டாளர்களுக்கு எந்த அறிகுறிகளையும் காட்டாமல் ஒரு எஸ்.டி.ஐ இருக்கலாம். யாரையாவது பார்த்தால் அவர்களுக்கு பால்வினைத் தொற்று இருக்கிறதா என்று நீங்கள் சொல்ல முடியாது. நீங்கள் கடைசியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதைப் பற்றி உங்கள் கூட்டாளர்களுடன் பேசுவது சிறந்தது அல்லது நீங்கள் உடலுறவுக்கு முன் ஒன்றாகச் சென்று சோதனை செய்து கொள்வது சாலச் சிறந்தது.
நினைவில் கொள்ளுங்கள்: ஒரு எஸ்.டி.ஐ-யால் பாதிக்கப்பட்டிருப்பது உங்களை ஒரு கவனக்குறைவான நபராக மாற்றாது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எஸ்.டி.ஐ.-யால் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் பெரும்பாலான நோய்த்தொற்றுகள் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க அல்லது நிர்வகிக்க எளிதானவையாக இருக்கின்றன. அடிக்கடி சோதனை செய்வதன் மூலமும், எஸ்.டி.ஐ.களை எவ்வாறு தடுப்பது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலமும், உங்களுக்கு வரும் ஆபத்தை குறைக்கலாம்.
குறிப்பிட்ட எஸ்.டி.ஐ-க்கள் பற்றி மேலும் அறிய, இந்த மூலத்தைப் பாருங்கள் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் உள்ளது).