நீங்கள் அதிகமாக உடலுறவு வைத்துக்கொள்பவராக இருந்தால், உங்கள் எச்.ஐ.வி நிலையை உறுதியாக அறிந்து கொள்வதற்கான ஒரே வழி வழக்கமான எச்.ஐ.வி பரிசோதனைமட்டுமே. இருப்பினும், ஒரு கிளினிக்கிற்கு செல்வது எப்போதும் எளிதானது அல்ல, அல்லது எச்.ஐ.வி சோதனை மையத்தில் உங்கள் தனியுரிமை அல்லது பாதுகாப்பு குறித்து நீங்கள் கவலைப்படலாம்.
சில இடங்களில், நீங்கள் வீட்டிலேயே சொந்தமாக முடிக்கக்கூடிய எச்.ஐ.வி சோதனை கருவியைப் பெற முடியும். ஒரு கிளினிக்கில் நீங்கள் பெறக்கூடிய எச்.ஐ.வி சோதனைகளைப் போல சுய-சோதனை கருவிகள் மிகவும் துல்லியமானதாக இருக்காது, ஆனால் சுய பரிசோதனை என்பது எந்தவொரு சோதனையும் செய்யாமல் இருப்பதை விட சிறந்தது.எதாவது ஒரு காரணத்திற்காக நீங்கள் மருத்துவ சேவை அளிப்போரிடம் எச்.ஐ.வி பரிசோதனையைப் பெற முடியாது அல்லது பெறத் தயங்குறீர்கள் என்றால், சுய சோதனையே அதற்கடுத்த சிறந்த முடிவாகும்.
எச்.ஐ.வி-யைத் துல்லியமாக கண்டறிய வீட்டில் செய்யப்படும் பெரும்பாலான எச்.ஐ.வி சோதனைகளுக்கு 23 முதல் 90 நாட்கள் வரை ஆகும். இந்த நேரத்தில், எச்.ஐ.வி தொற்று இல்லை என்று முடிவுகள் காட்டினாலும், உண்மையில் எச்.ஐ.வி தொற்று உள்ளதாகக் கூட இருக்கும். எனவே, உங்கள் எச்.ஐ.வி நிலையை தீர்மானிக்க இந்த இடைக் காலத்திலும் அதற்கு பின்னரும் சோதிக்க வேண்டியது அவசியம். உங்கள் சோதனைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் எச்.ஐ.வி ஆன்டிபாடிகளைக் (பிறபொருளெதிரி) கண்டறியக்கூடிய காலக்கெடுவை உங்களுக்குக் கூறும். கடந்த 72 மணி நேரத்திற்குள் நீங்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் உணர்ந்தால், உடனே PEP எனப்படும் தொற்று ஏற்பட்டப் பின் எடுத்துக்கொள்ளப்படும் தடுப்பு மருந்தைப் பற்றி மருத்துவ சேவை அளிப்போரிடம் பேசுங்கள்.
வீட்டில் எச்.ஐ.வி பரிசோதனை செய்ய தற்போது இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது ஒரு சோதனை கருவியைப் பயன்படுத்துவது ஆகும், இதில் நீங்கள் ஒரு துப்புரவு மாதிரியைப் (ஸ்வாப்) பயன்படுத்தி ஒரு உமிழ்நீர் மாதிரியைச் சேகரித்து, உடனடி சோதனை முடிவுகளைப் பார்க்கலாம். இரண்டாவது வழி வீட்டில் ஒரு இரத்த மாதிரியை எடுத்து, அதனை ஆய்வு செய்ய ஒரு ஆய்வகத்திற்கு அனுப்புவது. "ஆரோக்கியமான இணையச் சமூகங்களை உருவாக்குதல்" - இங்கே இந்த சோதனைகள் குறித்த கூடுதல் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் சோதனை முடிவுகள் நீங்கள் எச்.ஐ.வி-பாஸிட்டிவ், அதாவது எச்.ஐ.வி தொற்று உள்ளவர், என்று சொன்னால், உங்கள் வீட்டு சோதனை முடிவுகளை உறுதிப்படுத்த மிகவும் முக்கியமான பரிசோதனையை வழங்கக்கூடிய ஒரு மருத்துவ சேவை அளிப்போரை தொடர்புகொள்ளவும். சில நேரங்களில், எச்.ஐ.வி சோதனை தவறான முடிவைக் கொடுக்கக்கூடும், எனவே ஒரு மருத்துவ சேவை அளிப்போர் உங்களை மீண்டும் சோதிப்பது எப்போதும் சிறந்தது. உங்களுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது என்ற உங்கள் சோதனை முடிவை அவர்கள் உறுதிப்படுத்தினால், உங்கள் சிகிச்சையைத் தொடங்கவும், பிற ஆதரவு சேவைகளுடன் உங்களை இணைக்கவும் உங்கள் மருத்துவரால் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் அவரிடம் எதிர்மறையான சோதனை முடிவைப் பெற்றால், உங்கள் எச்.ஐ.வி. தொற்றுநிலையை அறிய நீங்கள் வழக்கமாகச் செய்யும் எச்.ஐ.வி பரிசோதனையைத் தொடரவும். எச்.ஐ.வி நோயைத் தடுக்க உதவும் தினசரி மாத்திரையான PrEP ஐத் தொடங்குவது பற்றி நீங்கள் ஒரு மருத்துவ சேவை அளிப்போருடன் நீங்கள் பேசுவது நல்லது.
தற்போது, வீட்டு சோதனை கருவிகள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உங்களுக்கு எளிதாக கிடைக்கின்றன. உங்களுக்கு எந்த எச்.ஐ.வி வீட்டு சோதனைக்கருவி விருப்பதெரிவுகள் கிடைக்கின்றன என்பதை இங்கே கண்டறியவும். வீட்டு சோதனை கருவியைப் பயன்படுத்துவது உங்களுக்கு சரியானதல்ல என்றால், உங்கள் அருகிலுள்ள எச்.ஐ.வி பரிசோதனை மையத்தை இங்கே காணலாம்.