ஆணுறைகளைப் பயன்படுத்துதல், மாத்திரை உட்கொள்வது, மற்றும் நீண்டகாலம் செயல்படும் பிற தடுப்பு முறைகள் உட்பட பல வழிகளில் கர்ப்பத்தைத் தடுக்கலாம். சில திருநர் நபர்களுக்கு, கர்ப்பத்தைப் பற்றி சிந்திப்பது அவர்கள் உடல்களை நினைவூட்டும் ஒரு சங்கடமான விஷயமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கருத்தரிக்க வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு இருக்கும் தடுப்பு வழிகள் பற்றி விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியம் ஆகும்.
கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது, ஒரு கூட்டாளருடன் கருத்தரிப்பைப் பற்றி பேசுவது அல்லது கருத்தடையைத் தொடங்குவது போன்ற விஷயங்கள் பல காரணங்களால் கடினமானவையாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வது உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
நீங்கள் ஹார்மோன்களை (இயக்குநீர்களை) எடுத்துக்கொண்டால், கருத்தடைக்கு டெஸ்டோஸ்டிரோன் (ஆண்மையியக்குநீர்) அல்லது ஈஸ்ட்ரோஜனை (பெண்மையியக்குநீர்) நம்புவது பலனளிக்காது. கருத்தடை உங்கள் ஹார்மோன் (இயக்குநீர்) சிகிச்சையில் தலையிடும் என்று நீங்கள் கவலைப்பட்டால், ஹார்மோன் (இயக்குநீர்) இல்லாத விருப்பத்தெரிவுகளை உள்ளடக்கிய திட்டமிடப்பட்ட பெற்றோர் நிலையின் (Planned Parenthood) பட்டியலைப் பாருங்கள். சந்தேகம் இருக்கும்போது, உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும் விருப்பத்தெரிவிற்கு வழிகாட்ட உதவும் திறனுள்ள மருத்துவ சேவை அளிப்போரிடம் பேசுங்கள்.
பாதுகாப்பான உடலுறவைக் கடைப்பிடிப்பதற்கான பிற உதவிக்குறிப்புகளுக்கு, திருநர் உடல்களுக்கான பாதுகாப்பான உடலுறவு என்ற இணைப்பைப் பாருங்கள். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)