சமூகத்தில் உள்ள சொற்கூறுகள் மற்றும் போக்குகள் குறித்து எங்கள் பயனர்களிடமிருந்து அடிக்கடி கேள்விகளைப் பெறுவோம். அத்தகைய ஒரு சொல் "பாப்பர்ஸ்" ஆகும். பாப்பர்ஸ் என்பது சில சமயங்களில் உடலுறவின் போது பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகும். அவை வேதியல் முறையில் அல்கைல் நைட்ரைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சிறிய குப்பிகளில் திரவமாக விற்கப்படுகின்றன, இது குப்பியைத் திறந்தவுடன் வாயுவாக மாறும்.
பாப்பர்ஸ்-ஐ உள்ளிழுப்பது உங்கள் இரத்த நாளங்களைத் திறக்கிறது, இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, உங்கள் இதயத் துடிப்பை வேகப்படுத்துகிறது. இது உங்களை லேசாக உணரவைக்கும் அல்லது உங்கள் உடலை மிக விரைவாக சூடாக உணர வைக்கும். இதன் விளைவுகள் சில வினாடிகள் அல்லது சில நிமிடங்கள் வரை நீடிக்கும். சிலருக்கு, பாப்பர்ஸ் தலைவலி அல்லது பொதுவான தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.
பாப்பர்ஸ் உட்கொள்வது பெரும்பாலான நாடுகளில் சட்டவிரோதமானது அல்ல, ஆனால் மதுவைப் போன்று இவற்றை தவறான வழியில் உட்கொண்டால் இவை உடல்நல கோளாறுகளை உண்டாக்குகின்றன. ஒவ்வொருவரும் பாப்பர்ஸ்-ஐப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு மாதிரி வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள், எல்லா பாப்பர்ஸும் ஒரே நபரை அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாக பாதிக்காது. சான் பிரான்சிஸ்கோ எய்ட்ஸ் அறக்கட்டளை இவ்வாறு பரிந்துரைக்கிறது: "நீங்கள் இதற்கு முன்பு பாப்பர்ஸ்-ஐப் பயன்படுத்தவில்லை என்றால், குறைந்த நேரத்திற்கு உள்ளிழுக்க முயற்சிக்கவும், மேலும் நீங்கள் புகைகளில் சுவாசிக்கும் நேரத்தை படிப்படியாக அதிகரிக்கவும்."
பாப்பர்ஸ் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட பிற பொருட்களுடன் அவற்றைப் பயன்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தும். நீங்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அதே நேரத்தில் பாப்பர்ஸ்-ஐப் பயன்படுத்துவது உங்கள் இரத்த அழுத்தத்தை ஆபத்தான அளவிற்கு குறைக்கும். எக்ஸ்டஸி, ஸ்பீடு, மற்றும் மெத் போன்ற பிற சட்டவிரோத மருந்துகளை பாப்பர்ஸுடன் பயன்படுத்தினால் உங்கள் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். குப்பியில் உள்ள திரவம் வெளியேறினால் உங்கள் மூக்கு மற்றும் வாயைச் சுற்றி மேலோட்டமான இரசாயன தீக்காயங்கள் ஏற்படலாம்.
பாப்பர்ஸ் உடலுறவின் போது உங்களின் இயல்பான தடுப்பு உணர்வுகளைக் குறைக்கலாம்.உங்கள் எச்.ஐ.வி மற்றும் எஸ்.டி.ஐ நிலையைப் பற்றி பேசுவது மற்றும் ஆணுறைகளைப் பயன்படுத்துவது உட்பட நீங்கள் எடுக்கும் பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் குறித்தும், மேலும் நீங்கள் எப்படி பாப்பர்ஸ்-ஐப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்களும் உங்கள் கூட்டாளர்களும் முன்பே ஒப்புக் கொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இராசயனப் பொருட்கள் மற்றும் உங்கள் பொது நல்வாழ்வைப் பற்றிய ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் உடல்நலப் பாதுகாப்பு நிபுணரைத் தொடர்பு கொள்ள நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
பாப்பர்ஸ் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.