ஒப்புதல் என்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தமாகும், நீங்கள் ஒருவரோடு சேர்ந்து என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அது வரையறுக்கிறது. ஒரு புதிய சக ஊழியர் தான் கட்டிப்பிடிக்கப்படுவதைப் பற்றி என்ன உணர்கிறார் என்று அவரிடமே கேட்டறிதல் அல்லது கிரைண்டரில் நாம் சந்தித்த ஒருவரிடம் பாலியல் ரீதியாக நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று வெளிப்படையாகச் சொல்லுதல் என நம் அன்றாட வாழ்க்கையில் ஒப்புதலைப் பயிற்சி செய்யலாம்.
பாலியல் உறவுகள் என்று வரும்போது, ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையானதை தாங்கள் பாதிக்கப்படாமல் பெறுவதற்கு ஒப்புதல் ஆனது உறுதியளிக்கிறது. ஒப்புதல் என்பது வெளிப்படையான கருத்துப்பரிமாற்றம் பற்றியது, மேலும் இது இரண்டு வழிகளில் நடக்கிறது: ஒப்புதல் பெறுதல் மற்றும் ஒப்புதல் வழங்குதல்.
ஒப்புதல் பெறுவது என்பது உங்கள் கூட்டாளி தன்னைப் பாதுகாப்பாக உணர்கிறாரா, தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா, தன்னை மகிழ்வித்துக் கொள்கிறாரா போன்ற கேள்விகளை வெளிப்படையான மற்றும் உற்சாகமான முறையில் உறுதிப்படுத்தலே ஆகும். கேள்விகளைக் கேட்பது (“நான் உங்கள் சட்டையைக் கழற்றலாமா…”) மற்றும் பரிந்துரைகளை வழங்குவது (“நான் உங்களை முத்தமிட விரும்புகிறேன்,உங்களுக்கு சம்மதம் தானே?”) உட்பட பல வழிகளில் ஒப்புதலைப் பெறலாம் . உங்கள் கூட்டாளியுடன் சரிபார்த்து அவர்களின் ஒப்புதலைப் பெறுவது என்பது ஒருவருக்கொருவர் தங்கள் எல்லைகளை அறிந்திருப்பதையும் மதிப்பதையும் உறுதி செய்யும்.
ஒப்புதல் வழங்குவது என்பது நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள் என்பதையும், நடக்கும் எல்லாவற்றிற்கும் நீங்கள் சம்மதிக்கிறீர்கள் என்பதையும் உங்கள் கூட்டாளிக்கு தெரியப்படுத்துவது ஆகும். “ஆம்” போன்ற வாய்மொழி உறுதிமொழிகளுடனும், இன்பத்தைக் குறிக்கும் சொற்களற்ற குறிப்புகளுடனும் நீங்கள் ஒப்புதலை வழங்கலாம் மற்றும் இவை உங்களுக்கு ஒரு நல்ல சுகமான அனுபவதத்தைத் தருகிறார் என்பதை உங்கள் கூட்டாளிக்கு தெரியப்படுத்தும்.
ஒப்புதல் என்பது எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறக்கூடிய ஒன்று என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் எப்போதாவது கிரைண்டரில் ஒருவரிடம் ஏதாவது சொல்லிவிட்டு அவரை நேரில் சந்தித்தபோது அவரைப்பற்றி வித்தியாசமாக உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் எப்போது என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது பற்றிய உங்கள் எண்ணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். கிரைண்டரில் நீங்கள் ஏதாவது ஒன்றிற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறீர்கள் என்பதால், நீங்கள் கூட்டாளியைச் சந்திக்கும் போது அதைக் கண்டிப்பாகச் செய்ய கடமைப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. ஆக மொத்தம், நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்கிற எந்தவொரு விஷயத்திலும் பரஸ்பரம் மரியாதைக்குரியவர்களாகவும் சௌகரியத்துடனும் நடத்தப்படத் தகுதியானவர்கள்.
ஒப்புதலைப் பற்றி மேலும் அறிய 'திட்டமிடப்பட்ட பெற்றோர் நிலை' (Planned Parenthood) - இன் இந்த காணொளியைப் பாருங்கள். 'டீன் வோக்' (Teen Vogue) - இன் இந்த பட்டியலில் ஒப்புதலைப் பற்றி எவ்வாறு கருத்துப்பரிமாற்றம் செய்வது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன. (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)