எஸ்.டி.ஐ.களைத் தடுப்பதற்கான முதல் படி, எஸ்.டி.ஐ.க்கள் வெவ்வேறு வழிகளில் பரவுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது. நீங்கள் இங்கே இதைப் பற்றி மேலும் படிக்கலாம்.
விந்தணு, யோனி மற்றும் குத திரவங்கள் போன்ற உடல் திரவங்கள் வழியாக பரவும் எஸ்.டி.ஐ.கள் பரவுவதைத் தடுக்க ஆணுறைகள் மற்றும் பல் அணைகள் ஒரு சிறந்த வழியாகும். இவற்றில் கிளமிடியா மற்றும் கோனோரியா ஆகியவை அடங்கும். ஆணுறைகள் மற்றும் பல் அணைகளைப் பயன்படுத்துவதால், ஆசனவாயை நக்குதல் போன்ற வாய்வழி புணர்ச்சி உட்பட தோல் வழி பரவும் எஸ்.டி.ஐ-களைத் தடுக்கலாம்,
நீங்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தாவிட்டால், மசகு (லூப்) பயன்படுத்துவது உங்கள் சருமத்தில் சிறிய கீறல்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும். கீறல்கள் ஏற்பட்டால் எஸ்.டி.ஐ களால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும். நீங்கள்மசகு அல்லது ஆணுறைகளைபெற முடியாவிட்டால், மாற்று வழிகளைப் பற்றி இங்கு மேலும் அறியலாம். கல்லீரல் அழற்சி - ஏ (ஹெபடைடிஸ் ஏ) மற்றும் எச்.பி.வி (HPV) போன்ற சில எஸ்.டி.ஐ.களால் நீங்கள் பாதிக்கப் படாமல் இருக்க அவற்றைத் தடுப்பூசி மூலம் தடுக்கலாம். எப்படி, எங்கு தடுப்பூசி பெறுவது என்பதை இங்கே காணலாம்.
நீங்கள் எச்.ஐ.வி தொற்று இல்லாத நபராக இருந்தால், எச்.ஐ.வி வராமல் தடுக்க வியக்கத்தக்க புதிய வழிகள் உள்ளன. எச்.ஐ.வி தொற்றுநோயைத் தடுக்கும் உடலுறவுக்கு முன் நீங்கள் எடுக்கக்கூடிய தினசரி மாத்திரை PrEP ஆகும். ஏற்கனவே எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கும் நீங்கள் சந்தேகித்தால், உங்களுக்கு எச்.ஐ.வி வராமல் தடுக்க உடலுறவு வைத்துக்கொண்ட 72 மணி நேரத்திற்குள் நீங்கள் PEP ஐ எடுத்துக் கொள்ளலாம். PrEP மற்றும் PEP ஆகியவை எச்.ஐ.வியை மட்டுமே தடுக்கின்றன, மற்ற எஸ்.டி ஐ-களை அல்ல.
எப்போதும்போல, நீங்கள் எப்படி உடலுறவு கொண்டாலும், ஒவ்வொரு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை பால்வினை நோய்தொற்று (எஸ்.டி.ஐ ) பரிசோதனையை மேற்கொள்வது உங்கள் நோய்தொற்றுநிலையை சரியான சமயத்தில் அறிந்துகொள்ள உதவுகிறது.எங்கே சோதனை செய்து கொள்வது என்பதை இங்கே தேடுங்கள், இதைச் செய்த பின்னர் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்.