பால்வினைத் தொற்றால் பாதிக்கப்படுவது என்பது உணர்ச்சிப்பூர்வமான ஓர் அனுபவமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்களை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் கவனித்துக் கொள்வது முக்கியம்.
நீங்கள் உங்களை கவனித்துக் கொள்வதற்கான ஒரு வழி, உங்களுக்கு ஆதரவானவர்களுடன் பேசுவது ஆகும். உங்கள் நிலையை பகிர்ந்து கொள்ளக்கூடிய நம்பகமான நபர்களை உங்கள் வாழ்க்கையில் வைத்திருப்பது நீங்கள் சிகிச்சை பெறும்போது தனிமையாக உணர்வதைக் குறைக்க உதவும்.
நோய்த்தொற்றைத் தொடர்ந்து உங்கள் உடல்நலனை நீங்கள் கட்டுப்படுத்த முடிந்ததைப் போலவே, உங்கள் கடந்தகால கூட்டாளிகளைத் தொடர்பு கொண்டு அவர்கள் பால்வினைத் தொற்று கொண்டிருக்கலாம் என்று கூறி அவர்களுக்கு உங்களால் ஊக்கமளிக்க இயலும். உங்கள் தொற்றுநோயைப் பற்றி உங்கள் கடந்தகால கூட்டாளிகளுக்குத் தெரிவிப்பதன் மூலம், அவர்கள் மருத்துவ சோதனை அல்லது சிகிச்சையை விரைவாகப் பெற நீங்கள் உதவுகிறீர்கள்.
உங்கள் கூட்டாளி மருத்துவ சோதனை அல்லது சிகிச்சை பெற வேண்டியிருக்கலாம் என்று அவர்களிடம் சொல்ல இது தான் ஒரே வழி என்று ஒன்றும் இல்லை. கடந்தகால கூட்டாளிகளை அழைப்பதன் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவோ, கிரைண்டர் மூலம் அவர்களுக்கு செய்தி அனுப்புவதன் மூலமாகவோ அல்லது நேரில் சொல்வதன் மூலமாகவோ நீங்கள் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் பால்வினைத் தொற்றுநோயைப் பெற்றதாக ஒரு கூட்டாளியிடம் சொல்வது வெட்கமாகவோ அல்லது சங்கடமாகவோ இருக்கலாம், அவ்வாறு செய்யும்போது நீங்கள் பாதுகாப்பற்றதாக கூட உணரலாம். அப்படியானால், நீங்கள் உங்கள் உள்ளூர் சுகாதாரத் துறையில் அல்லது TellYourPartner.org (அமெரிக்கா மட்டும்) இல் கூட்டாளி அறிவிப்பு சேவைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், உங்கள் கூட்டாளிகளுக்கு நீங்கள் அறிவிக்க தீர்மானிப்பது உங்களுடைய விருப்பம் சார்ந்தது.