ட்ருவாடா (Truvada), டெஸ்கோவி (Descovy), TENVIR EM போன்ற மருந்துகள் அல்லது TDF/FTC போன்ற பிற பொதுவான மருந்துகள் முதலில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீநுண்மத்தை (வைரஸை) எதிர்த்துப் போராட முதலில் உருவாக்கப்பட்டன. ஆனால் எச்.ஐ.வி தொற்று இல்லாத நபர்கள் தீநுண்மத்தால் பாதிக்கப்படலாம் என்ற ஐயம் இருந்தால் எச்.ஐ.வி.தொற்றுநோயைத் தடுக்க இதைப் பயன்படுத்தலாம் என்பதை இப்போது நாம் அறிவோம். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது ட்ருவாடா மற்றும் டெஸ்கோவியை PrEP ஆகப் பயன்படுத்த அங்கீகரிக்கிறது. இதேபோல், பெரு, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, கென்யா, இஸ்ரேல் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் இணையான அரசாங்க அமைப்புகள் PrEP க்கு ஒப்புதல் அளிக்கின்றன. பொதுவான PrEP மருந்தின் பிற வடிவங்கள் சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற பிற நாடுகளில், மருத்துவச் சோதனைகள் மூலம் சிலருக்கு PrEP கிடைக்கிறது. மேலும் பல இடங்களில், சமூக ஆர்வலர்கள் PrEP-ஐ அறிமுகப்படுத்தக் கோருகிறார்கள், ஆனால் அவர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தனிப்பட்ட நாடுகளைப் பற்றி மேலும் அறிய PrEP Watch-ஐப் பாருங்கள்.