எச்.ஐ.வி தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் புதிய மற்றும் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்று PrEP. இதைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் எச்.ஐ.வி பரவுவதைத் தடுக்க மிகவும் பயனுள்ள ஒரு மருந்தாக செயல்படும். ஆயினும், பிற பால்வினை நோய்களை PrEP தடுக்காது.
தற்போது, எச்.ஐ.வி நோயைத் தடுக்க இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட ஒரே மாத்திரை TENVIR EM அல்லது TDF / FTC என்று அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாளும் வாய்வழி போட்டுக்கொள்ளும் மாத்திரை ஆகும். இந்த TENVIR EM மற்றும் TDF / FTC போன்ற பிற மருந்துகளாவன ட்ருவாடா (Truvada) மற்றும் டெஸ்கோவி (Descovy) என்று அழைக்கப்படுகின்றன. இவை தற்போது ஒரு சில நாடுகளில் எச்.ஐ.வி தொற்று இல்லாத நபர்களால் மட்டுமே PrEP ஆக பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை விரைவில் இன்னும் பல நாடுகளுக்கு வரவிருக்கின்றன.
மேலதிக தகவல்களுக்கு "Greater Than AIDS"-இன் இந்த 90 வினாடி காணொளியைப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)