இந்த கேள்விக்கான பதில் நீங்கள் உடலுறவு கொள்ளும் விதத்தைச் சார்ந்துள்ளது. பொதுவாக ஒரு மருத்துவர் எச்.ஐ.விக்கு உங்களை சோதிப்பார், சிபிலிஸிற்கு (கிரந்தி) இரத்த பரிசோதனை செய்வார், உங்கள் பிறப்புறுப்புகளில் பால்வினைநோய்களைக் கண்டறிய சிறுநீர் பரிசோதனை செய்வார். நீங்கள் வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடுபவராக இருந்தால், மருத்துவர் உங்கள் வாயைத் திறந்து சோதிப்பதை உறுதி செய்து கொள்க, மேலும் நீங்கள் ஆசனவாயில் புணர்ச்சி ஏற்பீர்கள் (Bottom) என்றால் , மருத்துவர் உங்கள் ஆசனவாயைச் சோதிப்பதில் உறுதி செய்து கொள்க.
ஹெபடைடிஸ் B (கல்லீரல் அழற்சி - பி) க்கு குறைந்தபட்சம் ஒருமுறை ஏனும் பரிசோதிக்கப்பட வேண்டியது அவசியம். அதே போல், குறிப்பாக நீங்கள் எச் ஐ வி உடைய நபராக இருந்தால், ஹெபடைடிஸ் C (கல்லீரல் அழற்சி - சி) க்காக பரிசோதிக்கப்பட வேண்டியது அவசியம்
மேலும் தகவல்களுக்கு Greater Than AIDS-இலிருந்து இந்த ஒரு நிமிடக் காணொளியைப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)