முத்தம், பரஸ்பர சுயஇன்பம், மற்றும் பரஸ்பரம் குறிகளை உரசிக்கொள்ளுதல் (frotting) போன்றவற்றால் எச்.ஐ.விக்கான ஆபத்து இல்லை. வாய்வழி புணர்ச்சி, ஆசனவாயை நக்குதல் (rimming), ஆணுறை அணிந்துகொண்டு ஆசனவாயில் நுழைத்தல் (Topping with condom) மற்றும் ஆணுறை அணிவித்து ஆசனவாயில் ஏற்றுக்கொள்ளுதல் (Bottoming with condom) ஆகியவற்றால் எச்.ஐ. விக்கான மிகக் குறைந்த ஆபத்து உண்டு. ஆணுறை அணியாமல் ஆசனவாயில் நுழைத்தலால் (Topping without condom) எச்.ஐ.விக்கான மிதமான ஆபத்து உண்டு. ஆணுறை அணிவிக்காமல் ஆசனவாயில் ஏற்றுக்கொள்ளுதலால் (Bottoming without condom) எச்.ஐ.விக்கான அதிக ஆபத்து உண்டு.
இவை எச்.ஐ.விக்கு மட்டுமே பொருந்தும். இவை சிபிலிஸ் (கிரந்தி), கொணேரியா (மேகவெட்டை), கிளமிடியா, அல்லது ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) போன்ற பிற பால்வினை நோய்களுக்கு பொருந்தாது.