எச்.ஐ.வி யோடு வாழ்கின்ற ஒரு நபர் கண்டறியவியலா நிலையில் இருக்கும்போது அவர் ஆரோக்கியமானவராக மட்டும் அல்லாமல் வேறு எவருக்கும் எச்.ஐ.வி யைப் பரப்பாத நபராகவும் இருக்கிறார் என்பதை அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது. கண்டறியவியலா நிலை என்பது பரப்பவியலா நிலைக்கு சமம். ஆங்கிலத்தில் இதனை Undetectable = Untransmittable (U = U) என்பர்.
இது எச்.ஐ.வி. வரலாற்றில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். எச்.ஐ.வி உடைய மக்கள் கண்டறியவியலா நிலையில் இருப்பார்களாயின் அவர்களுடன் உடலுறவு கொள்வோர்களுக்கு தங்களால் தீநுண்மத்தொற்று பரவிவிடுமோ என்று அஞ்சத்தேவையில்லை. தினசரி தங்கள் ஆரோக்கியத்திற்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் எச்.ஐ.வி. உடைய மக்களே எச்.ஐ.வியின் முடிவிற்கான தீர்வின் பங்குதாரர்கள் ஆவார்கள்.
www.UequalsU.org / Building Healthy Online Communities -ஐப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)