அமெரிக்க தேசிய பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி-யின் பரிந்துரைப்படி பலருடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் தற்பாலீர்ப்பு மற்றும் ஈர்பாலீர்ப்புள்ள ஆண்கள், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் உடலுறவு வைத்துக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், நீங்கள் எந்த வகையான உடலுறவு வைத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை உங்கள் பரிசோதனையை நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளலாம்.
மிகவும் முழுமையான பரிசோதனை சாத்தியம் பெற, நீங்கள் உடலுறவின்போது பயன்படுத்தும் ஒவ்வொரு உடலுறுப்பையும் சோதித்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வாய்வழி புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தால், மருத்துவர் உங்கள் வாயைத் திறந்து சோதிப்பதை உறுதி செய்துகொள்க. உங்கள் ஆசனவாயை நக்கக்கொடுத்தல் (being rimmed) அல்லது உங்கள் ஆசனவாயில் புணர்ச்சியை ஏற்றுக்கொள்ளுதல் (bottoming) ஆகியவற்றில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், உங்கள் ஆசனவாயைச் சோதிப்பதை உறுதி செய்துகொள்க. பொதுவாக உங்கள் சிறுநீரின் மூலம் உங்கள் பிறப்புறுப்புகள் சோதிக்கப்படுகின்றன.
மேலும் தகவல்களுக்கு Greater Than AIDS-இலிருந்து இந்த ஒரு நிமிடக் காணொளியைப் பார்க்கவும்