இந்த கேள்விக்கான பதில் சிக்கலானது. ஒரு சிலருக்கு, குறிப்பாக மாற்றுப் பாலீர்ப்போடு இருப்பது சட்டவிரோதமாக இருக்கும் நாடுகளில் அல்லது மருத்துவர் மற்றும் நோயாளிகளுக்கு இடையே தனியுரிமை உத்தரவாதச் சட்டம் இல்லாத நாடுகளில், மருத்துவரோடு உண்மைகளைக் வெளிப்படையாகக் கூறுவது பாதுகாப்பானதாகக் கருதமுடியாது.
இருந்தபோதிலும், நம் மருத்துவர்களை நம்மால் நம்ப முடிந்தால், அவர்களால் நம்மை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். உங்கள் பாலின அடையாளம், பாலியல் நாட்டம், மற்றும் நீங்கள் கொள்ளும் பல்வேறு உடலுறவு வகைகள் ஆகியவற்றைப் பற்றி அவர்களிடம் பேசுவதால், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வேண்டிய சரியான பரிசோதனைகளை அவர்களால் செய்ய இயலும்.
மருத்துவரின் அறையில் ஒரு பாதுகாப்பான மற்றும் கூச்சமில்லாத அனுபவம் உங்களுக்குத் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாலியல் நாட்டம், பாலின அடையாளம் அல்லது உங்களுடைய உடலுறவு தவறானது என்று ஒரு மருத்துவர் உங்களிடம் சொல்ல முயன்றால், நீங்கள் உங்கள் சந்திப்பின்போது மருந்தைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறீர்கள் என்று பணிவாக அவர்களிடம் சொல்லுங்கள்.
மேலும் தகவல்களுக்கு Greater Than AIDS-இலிருந்து இந்த ஒரு நிமிடக் காணொளியைப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)