எச்.ஐ.வி என்பது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மத்தைக் குறிக்கிறது. எச்.ஐ.வி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது, மேலும் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் கடினமாக்குகிறது. எச்.ஐ. வி நம்முடலில் முன்னேற்றம் அடைந்தால், அது எய்ட்ஸ் எனப்படும் பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி என்பதை ஏற்படுத்தலாம்.
அதிர்ஷ்டவசமாக, உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக்கொள்ள பயனுள்ள சிகிச்சைகள் இருக்கின்றன. ஆரம்ப காலத்திலேயே மருந்துகளை எடுக்கத் தொடங்கி பின் அதனை தொடர்ச்சியாக பின்பற்றினால் எச்.ஐ.வி-யை இப்போது சமாளிக்கலாம். இதில் பல முன்னேற்றங்கள் அடைந்தும் அடையப்பெற்றும் வருகின்றன. இன்று, எச்.ஐ.வி தொற்றுள்ள மக்கள் தங்கள் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், எச்.ஐ.வி தொற்றற்ற மக்களின் வாழ்நாளுக்கு நிகராக வாழ முடியும்.
மேலும் தகவல்களுக்கு Greater Than AIDS-இலிருந்து இந்த ஒரு நிமிடக் காணொளியைப் பார்க்கவும். (ஆங்கில மொழி மூலத்திற்கான இணைப்பு)